Posts

Showing posts from May, 2014

உளவியலின் அறிமுகம் இயல்பு பரப்பு வரலாறு

உளவியலின் அறிமுகம் இயல்பு பரப்பு வரலாறு ஆன்மா அல்லது மனம் பற்றிய விஞ்ஞான உணர்வே உளவியல் எனப்படுகிறது தற்காலத்தில் உயிரிகளின் வெளிப்டையான நடத்தைகள் பற்றிய ஆய்வு உளவியல் எனப்படுகிறது உளவியல் என்பது ஆங்கிலத்தில் psychology எனப்படுகிறது இது psyche + logos என்ற கிரேக்க எண்ணக்கருவில் இருந்து தோற்றம் பெற்றது psyche - ஆன்மா அல்லது மனம் எனப்படுகிறது logos - அறிவு அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது எனவே மனம் அல்லது ஆன்மா பற்றிய அறிவு உளவியல் என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது உளவியலின் முதல் நூல் அரிஸ்டாட்டில் ஆல் எழுதப்பட்ட De Anima (ஆன்மாவின் இயல்பு என்பதாகும் ) உளவியலின் வரலாறு 1. ஆதி கிரேக்க கால உளவியல் 2. மத்திய கால உளவியல் 3. நவீன கால உளவியல் 4. தற்கால உளவியல் ஆதி கிரேக்க உளவியல் புரொட்டொகிரஸ்   மனிதனே அனைத்தையும் அளந்தறியும் அளவுகோல். சோக்கிரட்டிஸ் - மனித நடத்தை, விலங்கு நடத்தை பற்றி ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார். ஹிப்போகிரட்டிஸ்  - உளவியல் சார் உடலியல் ஆய்வின் முன்னோடி இவர் உடல் உள தொடர்பு பற்றி ஆய்வு செய்துள்ளார் ஒரு உளவியல் மருத்துவராக விளங்கினார். பிளேட்டோ -...