உளவியலின் அறிமுகம் இயல்பு பரப்பு வரலாறு

உளவியலின் அறிமுகம் இயல்பு பரப்பு வரலாறு

ஆன்மா அல்லது மனம் பற்றிய விஞ்ஞான உணர்வே உளவியல் எனப்படுகிறது தற்காலத்தில் உயிரிகளின் வெளிப்டையான நடத்தைகள் பற்றிய ஆய்வு உளவியல் எனப்படுகிறது

உளவியல் என்பது ஆங்கிலத்தில் psychology எனப்படுகிறது இது psyche + logos என்ற கிரேக்க எண்ணக்கருவில் இருந்து தோற்றம் பெற்றது
psyche - ஆன்மா அல்லது மனம் எனப்படுகிறது
logos - அறிவு அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது
எனவே மனம் அல்லது ஆன்மா பற்றிய அறிவு உளவியல் என வரைவிலக்கணப்படுத்தப்படுகிறது

உளவியலின் முதல் நூல் அரிஸ்டாட்டில் ஆல் எழுதப்பட்ட De Anima (ஆன்மாவின் இயல்பு என்பதாகும் )

உளவியலின் வரலாறு
1. ஆதி கிரேக்க கால உளவியல்
2. மத்திய கால உளவியல்
3. நவீன கால உளவியல்
4. தற்கால உளவியல்

ஆதி கிரேக்க உளவியல்


புரொட்டொகிரஸ்  மனிதனே அனைத்தையும் அளந்தறியும் அளவுகோல்.

சோக்கிரட்டிஸ் - மனித நடத்தை, விலங்கு நடத்தை பற்றி ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார்.

ஹிப்போகிரட்டிஸ்  - உளவியல் சார் உடலியல் ஆய்வின் முன்னோடி இவர் உடல் உள தொடர்பு பற்றி ஆய்வு செய்துள்ளார் ஒரு உளவியல் மருத்துவராக விளங்கினார்.

பிளேட்டோ - மனிதன் மரணமடைகின்ற போது ஆன்மா கருத்துக்களின் உலகத்தை சென்றடைகின்றது எனவே உளவியல் ஆன்மா பற்றிய அறிவை கூறுகின்றார்.

அரிஸ்டோட்டில் - உடலின் செயற்பாடே உள்ளம் எனக்கூறி அறிவு அனுபவம் நடத்தை போன்ற செயற்பாடுகளை விளக்கியுள்ளார். இவர் ஆன்மாவின் இயல்பு என்ற நூலை எழுதி ஆன்மாதான் உளவியல் என விளக்கினார்.

இங்கு ஆன்மா என்பது ஒரு பௌதீக அதீத பொருளாகும் உளவியலின் தந்தையாக அரிஸ்டோட்டில் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கபடுகிறார்.

மத்தியகால உளவியல்

கிறிஸ்தவ திருச்சபை
இங்கு விஞ்ஞான பூர்வ கருத்துக்கள் முதன்மை பெறுகின்றது. இறை விசுவாசம்,மோட்சம் போன்ற கிறிஸ்தவ கருத்துக்கள் செறிந்து காணபடுகின்றது

புனித அகஸ்டின்

மனநிலை பற்றிய ஆய்வே உளவியல் இவ்வாறு உளச்செயற்பாடு பற்றி ஆய்வு செய்துள்ளார். உதாரணமாக குதிரை வண்டி போட்டியை பார்வை இடும் மக்களின் மனநிலை.

நவீன கால உளவியல்


டேக்காட்
இவர் நவீன உளவியலின் தந்தை இவரது பொறிமுறை வாதத்தில் இயந்திரம் போன்ற சிக்கலான பொறிமுறையாக மனித உடல் காணபடுகிறது எனக்கூறினார். உடல்,ஆன்மா, கடவுள் தொடர்பு பற்றி விளக்கியுள்ளார். இவரது இருமை வாத கோட்பாட்டில் மனிதன் இரு வஸ்துக்களால் ஆனவன் அவை உடல் உளம் என்பதாகும். இவற்றுக்கிடையிலான தொடர்பு பற்றியும் விளக்கியுள்ளார். டேக்காட்டால் கூறப்பட்ட ஐயவாதத்தின்படி நான் சிந்திக்கிறேன் ஆகவே நான் இருக்கிறேன் என்ற கருத்தில் மனிதனின் இருப்பை நிறுவுவதற்கு சிந்த்தனையை ஆய்வு செய்கின்றார்.

மனித நடத்தை விலங்கு நடத்தை என்பவற்றை வேறுபடுத்தியுள்ளார் மேலும் மனிதனின் மறுவினை செயற்பாடு பற்றிய கருத்துகளையும் முன்வைத்தார்   

Popular posts from this blog

ஐந்திலக்கண நூல்கள்!!

மூவிடப்பெயர்