மூவிடப்பெயர்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBlvUqRpkwoZpXseYvVzXo2FqkGtRlH2Pc8sSpNT1SOhApbpzIu8DE5GWnZ2BXH6495W4n8h8kMeBvJMkwGFPMDEvPk5SjnwISuaMFdN0jL66ioZQAUU7Ml3zXN0NmeqvzjiMhPLzqTLho/s320/moo.gif)
1.2 மூவிடப்பெயர்கள் மொழிகளின் உறவையும் மொழியினங்களின் தொடர்பையும் விளக்கும் வகையில் மூவிடப்பெயர்கள் (Personal pronouns) சிறந்து நிற்கின்றன. பொதுவாக ஒரு மொழியில் சொற்கள் காலந்தோறும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மூவிடப்பெயர்கள் எவ்வளவு காலமாயினும் பெரும் மாற்றத்திற்கு உள்ளாவதில்லை. காலப்போக்கில் மூவிடப்பெயர்களில் சிறுசிறு மாறுதல்கள் ஏற்படுவது உண்டு. ஆயினும் பழைய சொல் வடிவுக்கும் புதிய சொல் வடிவுக்கும் உள்ள உறவு தெளிவாய்த் தெரியும். சான்றாகத் தமிழில், நனிமிகு பழங்காலத்தில் தன்மை ஒருமை இடப்பெயராக ‘யான்’ மட்டுமே வழங்கியது. காலப்போக்கில் ‘நான்’ என்ற புதிய வடிவம் வந்தது. இருப்பினும் இவ்விரு வடிவங்களுக்கும் உள்ள வேற்றுமை குறைவு. இதுபோன்ற சிறு மாறுதல் நிகழ்வதற்குக் கூட நெடுங்காலம் வேண்டியுள்ளது. மூவிடப்பெயர்கள் தன்மை இடப்பெயர், முன்னிலை இடப்பெ...